அழகா முருகா

அருள்வாய் முருகா; அழகா முருகா; 

அன்புடன் நீயே; வடிவேல் முருகா!


ஈசன் தந்த இறைவா முருகா!  

இமயவன் தளபதி எங்கள் முருகா !


கலங்கா உள்ளம் கருணை வெள்ளம் ;

எவர்க்கும் உதவும் ஈகையின் நற்குணம்!


அருள்வாய் அழகா ;

ஈசன் புதல்வா !

அழகா முருகா; 

உலகின் முதல்வா!


கண்கள் காட்டும் கருணையின் ஆழம்; கையில் வேலது ;காத்திடும் வீரம்;


இதயம் பேசும்  இறைவா முருகா! 

காப்பாய் எமையே கண்களின் இமையே!

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்