கல்யாண சுந்தரன்

படையோடு வருகிறான் பாருங்கள் !

பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள்!


காளை மீதவன் ஊர்கோலம்; 

கல்யாண சுந்தர திருக்கோலம் !


பாருங்கள் வந்து பாருங்கள்; 

பரமேஸ்வரன் புகழ் பாடுங்கள் !


சூரிய பந்தை உதைத்தவள் அன்னை ;

பூமியில் பசுவாய் பிறந்தாள் பின்னை!


காளை மீதிலே சென்றான் காளை ;

கன்னி பசுவின் கல்யாண மாலை!


அண்ணன் மாலன் அருகில் நாரதன் ;

ஆயிரம் தேவர் அழைத்து சென்றிட !


அன்னையை மணந்தான் கல்யாண சுந்தரன்; அருள்வான் நமக்கே ஆலால கண்டன்!


கண்களில் வாழும் காட்சியின் செல்வன்; காப்பான் நம்மை கல்யாண சுந்தரன் !

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்