ஆடிய பாதமே போற்றி
ஆடும் கால்களில் அதிசயம் காட்டியே அற்புதம் செய்யும் ஆதி சிவனே போற்றி
தேடும் விழிகளில் கோடி விந்தைகள்
கோலம் காட்டியே
ஆடி நின்ற சிவனே போற்றி
நேயன் சேந்தனின் ஆதிரை களியை ஆசையுடன் உண்ட பேயன் சிவனே போற்றி
ஆதி சேஷன் அவன் ஆடல் காணவே
ஓடி வந்தான் உன்னை போற்றி
நாடி வந்தவன் பதஞ்சலி ஆகி நின்றே
பரதம் பயின்றான் போற்றி
கூடும் மனிதர் தம் வாழ்வின் துயரங்கள் ஓடி மறைந்தது போற்றி
கொண்ட துணையுடன் கோலம் காட்டியே ஞாலம் காத்தவன் போற்றி
போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம்
ஆதி சிவனே போற்றி
போற்றி போற்றி ஓம்
எம்மை காத்து நின்ற காவலன் புகழ் போற்றி
Comments
Post a Comment