அன்புடன் தம்பி

வந்தான் எங்கள் அன்புத் தம்பி 

வாழ்த்துக்கள் சொல்வேனே


கண்கள் திறந்து மூடி திறந்து 

கண்மணி சிரிப்பானே

எங்கள் தம்பி சிரிப்பானே


சின்னவன் அவனே எழுந்து நடக்கையில் தாங்கி பிடிப்பேனே 


கையை பிடித்து கால்கள் நடக்கையில் துணையாய் நடப்பேனே 


என்றும் துணையாய் இருப்பேனே


எங்கள் தம்பி என்னுடன் ஆடி சிரித்து வளர்வானே

எந்தன் தோளானாய் இருப்பானே


எல்லாம் தெரிந்து என்னுடன் வளர்ந்து 

இமயம் தொடுவானே


எங்கள் தம்பி இமயம் வெல்வானே

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்