பிள்ளையார் என்பது பேரு

வெள்ளை நிலவின் பிறையாய் அழகாய் 

பேறு கொண்டவன் யாரு


பிரிய முள்ளவன் பிடித்து வைத்தவன் பிள்ளையார் என்றே பேரு


காலங் காலமாய் காவல் தெய்வமாய் 

காக்கும் கடவுள் யாரு 


அரச மரத்திடை ஆளும் வேம்புடன் 

ஆட்சி செய்பவன் பேரு


பெற்ற தாயவள் உற்ற பிள்ளையாய் 

உலகை யாள்பவன் யாரு


ஊரும் பேருமாய் உயிர்கள் வாழ்ந்திட 

உற்ற துணை யவன் பாரு


பிள்ளையார் என்றே பேரு 

பிள்ளையார் என்றே பேரு

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்