ஈசன் வரும் வேளை
துள்ளும் உள்ளமாய் உடனிருந்து
தும்பிக்கையான் முகம் தனைத்தந்து
நம்பிக்கை வாழ்வில் தினம் தந்து
நந்திகேஷ்வரன் முன்
நின்று
நான்மறை போற்றும் நாயகனாய்
நான்மாட கூடலில் சேவகனாய்
அன்னை உமையவள் நாயகனாய்
ஆடும் கால்களில் தலைமகனாய்
மாலை மயங்கும் வேளைதனில்
மகேஸ்வரன் வருவான் பூமிதனில்
முன்னை வினைகள் முடிவாக
என்னை காப்பாய் உயிராக
Comments
Post a Comment