ரித்தின்
ஆத்தோரம் மாமரமே; அள்ளித் தந்த சீதனமே; ஆசையாய் நான் பாக்கும்; அழியாத ஓவியமே,
காத்தாடும் மூங்கிலிலே; கரைஞ்சோடும் தேன் குரலே;
காவேரியாத்தினிலே கால் நனைக்கும் வாங்கல் மண்ணே,
புரட்டாசி புதுமாசம்; பூவெல்லாம் தேன் வாசம்; பொறந்தானே எம்பேரன் பொங்கிவரும் ஆறாட்டம்,
காவேரி ஆறுமாச்சு; கரையும் இங்கே ஈரமாச்சு; கால் எடுத்து நீ நடக்க ;கடலு கூட ஓரம்போச்சு,
பள்ளிக்கூடம் போகவேணும்;பாடங்களை படிக்கவேணும்;
பாசத்துல நீயுமொரு; பள்ளிக்கூடம் ஆகவேணும்,
நிறைய நீ படிக்கவேணும்; நெச வாழ்க்கை வாழ வேணும் ;
பணம்தேடி ஓடும் அந்த பரிதாபம் குறைக்க வேணும்,
தாய் சொல்ல தகப்பன் சொல்ல; தட்டாம கேக்க வேணும்;
தன்னுசுரா உன்னுசுரா தங்கச்சிய பாக்க வேணும்,
வேர்வை நனைச்சுவைச்சா;விதையெல்லாம் மரமாகும்;
விடிகால சூரியனே !ராவெல்லாம் பகலாகும்,
தாய் தகப்பன் மனசுபோல தழைச்சு நிக்கும் நெல்மணியே;
தாத்தாவின் உசுரத்தான் தாங்கி நிக்கும் கண்மணியே!
Comments
Post a Comment