எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை அழகாய் எத்தனை மாலைகள் அத்தனை அழகுடன் அத்தனை மணமுடன் பித்தனின் மகனாய் பிறந்தவன் குமரன் எங்கள் முருகன் என்றும் அழகன் தன்னிகரில்லா தணிகாசலம் அவன் வேலொன்று கொண்ட விரல்களின் அழகன் வேலவன் குமரன் வெற்றியை தருபவன் தங்க மாலையாய் தாங்கிடும் தோழன் தவழ்ந்திடும் புன்னகை தந்திடும் முருகன் எங்கள் வாழ்வில் இனியவன் அழகன் என்றும் காக்கும் இளையவன் முருகன்
மங்கல நாணை சூடி வந்தாள் மங்கை மாரி காக்க வந்தாள் கண்ணுக்குள் தீயை தேக்கி வைத்தாள் கண்கள் மூடியே காவல் கொண்டாள் பட்டு வண்ண சிற்றாடை பாசத்தில் பாயும் நீரோடை ஜொலிக்கும் மூக்குத்தி முகஜாடை சொந்தம் கூடிடும் அவள் மேடை ஏந்திடும் வாளை ஒரு கரமே என்றும் காத்திடும் அவள் வரமே மண்ணில் மழையாய் இறங்கிடுமே மாரியின் கருணை காத்திடுமே
Comments
Post a Comment