கலைகளின் வாணி

 கண்கள் திறந்தாள் 

கலைகளின் வாணி

கவிதைகள் தந்தாள் 

கருணையின் ராணி


இன்னிசை வீணை 

இசை தந்த வாணி

இனித்திடும் இல்லம் 

இவள் எங்கள் வேணி 


தாமரை தாங்கிடும் 

தளிர் மென் மேனி

தவழ்ந்திடும் புன்னகை 

தான் கொண்ட வாணி


கற்றிட ஆயிரம் தந்தவள் வாணி

காலையின் கதிராய் காப்பவள் ராணி

Comments

Popular posts from this blog

எங்கள் குமரன் என்றும் அழகன்

மங்கை மாரி

காரிருள் வண்ணன்